சில இரவுகள் தனிமை விரும்பும்!
சில இரவுகள் தோழமை விரும்பும்!
சில இரவுகள் தேடல் விரும்பும்!
சில இரவுகள் காதல் விரும்பும்!
சில இரவுகள் காமம் விரும்பும்!
சில இரவுகள் மாற்றம் விரும்பும்! விருப்பம் எதுவாயினும் விடியலில் தன்னை துலைத்து மீண்டும் மீட்டுக்கொள்ளும் புதியதாய்!
Friday, February 2, 2018
இரவுகளும் புதிதுதான்!
Tuesday, August 22, 2017
திருமணம்!
உயிர் வேறு....
உணர்வுகள் வேறு....
மனம் வேறு....
குணம் வேறு....
எல்லாம் வேறாய் இருவர்....
இணையும் அற்புதமே திருமணம்!
Thursday, August 10, 2017
நான் என்னும் அதிசயம்!
கருவாக இருந்தேன்....
அமைதி கொண்டேன்!
உரு மாறினேன்....
தாய் உடல் பிரிந்தேன்!
மெல்ல விழி திறந்து ஒளி கண்டேன்...
புது உலகம் என அறிந்தேன்!
பயமா? பிரமிப்பா? முதல் அழுகை...
அணைப்பில் அடங்கியது!
காணும் காட்சி எல்லாம் ஆச்சர்யமாய்!
கேட்கும் ஒலி எல்லாம் விசித்திரமாய்!
தாய் முகமே பரிச்சயமாய்!
என்னை நானே உணர்ந்தேன் பேர் அதிசயமாய்!!!
Monday, August 7, 2017
தாய்மை!!!
தாய்மை!
தன்னம்பிக்கை கொள்ளும்....
தன்னிலை உணரும்....
தூக்கம் மறக்கும்....
தூய அன்பில் விழிக்கும்....
தாலாட்டு பாடி....
தலை கொஞ்சம் கோதி....
உயிர் கொடுத்த புது உறவு....
உள்ளங்கை பிடித்து உறங்கயில்....
பெண் அழகில் ஒளிந்திருக்கும் தன் அழகில் பெருமைகொள்ளும்!!!
Friday, July 14, 2017
என் உலகம்!
மாதங்கள் பத்து முழுதும் உன் உலகம் நானாய் இருந்தேன்.....
என் கண்னே...
உன் முகம் கண்ட நாள் முதல்....
என் உலகே நீயாகி போனாய்!
Friday, March 10, 2017
வியன்:)
இன்பங்கள் சேர்த்தான் இவன்
இதயங்கள் வென்றான் இவன்
புன்னகையால் ஆள்வான் இவன்
படைப்பின் பரிசானவன்
இவன் - வியன்
Thursday, February 2, 2017
சின்னஞ்சிறு உலகம்!
என்னுள் கருவாய்....
என் சரி பாதியின் உருவாய்....
புது உறவாய்....
அழகாய் நீ வந்தாய் என் வாழ்வில்!
என் கண்னே!
தினம் நிற்காமல் சுழல்கிறது என் மனம் ....
உன் சின்னஞ்சிறு உலகை சுற்றியே!