அன்று !
என்னிடம்
ஒழிந்து விளையாட நினைத்து .....
உன் ஒளியை ஒழித்துக்கொள்வாய்!
காணாமல் நான் பதறியதும்.....
மேகம் விலக்கி முகம் சிரிப்பாய் !
இன்று !
நான் வளர்ந்து விட்டேன் என நினைத்து ....
தனிமை உணர்கிறாயோ நிலவே !
என் தனிமையை என்றும் நீ துடைப்பது அறியாமல் !