இரவு வானம்!
நட்சத்திர கூட்டம்!
இருந்தும்,
முழு நிலவாய்
வட்டமிட்டு தனித்திருந்தாள்!
துலைந்து விடவில்லை;
தன்னை திரும்ப தேடிக்கொண்டாள்!
தனிமையில் மிளிர்ந்து நின்றாள்- அவள்!
மெல்ல மெல்ல....
மிளிரும் அவள் ஒளியில் பிரகாசிக்க துவங்கியது,
சூழ்ந்த அவள் இருளும்; தனிமையும்!
No comments:
Post a Comment