Wednesday, September 25, 2013

நிஜ அழகு!!!

பார்வை அற்றவன் எளிதாய் காண்கிறான் நிஜ அழகை ...... எனில் அவன் சந்திப்பது தோற்றங்களை அல்ல இதயங்களை !!!!

Wednesday, September 18, 2013

ஓட்டம் ....
பணம் பறிக்கும் ஓட்டம் ...
நேசம் மறக்கும் ஓட்டம் ....
வாகன புகைக்குள் சிக்கி ....
இயந்திரமாகும் அவசர ஓட்டம் ....
உறவுகள் உண்டு ...
உரிமை இல்லை !
அன்பு உண்டு ....
நேரம் இல்லை !
ரூபாய் தாள்களில் உன் விதி எழுதப்படவில்லை !!! 
விழித்துக்கொள் மனிதா!
தனிமைக்குள் துலைந்து போவதேன் ???
இயற்கை விட்டு விலகி போவதேன் ???
ஓடி கலைத்த பின் வெற்றி கிடைக்கலாம் ......
வாழ்க்கை கிடைக்குமா ????
சிந்தித்துப்பார் !!!!

விளையாட்டு!!!

சிதறிய மழைத்துளிகள் என் ஜன்னல் ஓரம் .....
உடைந்து போகும் துளிகளையும் ....
உருகி போகும் துளிகளையும் விட்டு விட்டு ....
நிமிர்ந்து சிரிக்கும் துளிகளை .....
என் விரல்களோடு விளையாட அழைத்தேன் !!!

போர்வை!!!

பனி போர்த்தி கொள்கிறது மலை .....
மழையில் நனைந்த குளிரால் !!!!!