Wednesday, November 10, 2010

ஒரு நாள் பரிசு !!!!!!!



ஒரு நாள் பரிசாக, என் கையில் உலகை தந்தான் இறைவன்!

பரிசை திறந்தேன்....

அழகாய் விரிந்தது சூரியன்!

அமைதியாய் கலைந்தன மேகங்கள்!

குயிலின் பாட்டு காற்றோடு கலக்க....

இதமான காலை தென்றல் மொத்தமாய் சுழ்ந்து கொண்டது!

இதை ரசிக்க நொடி இல்லாமல்....

இயந்திர வாழ்வை நோக்கி பயனித்து கொண்டிருக்கிறது மாந்தர் கூட்டம்!



இயற்கையை அழித்து, செயற்கை கண்டுபிடிப்புகள் ஒரு புரம்....

மனிதநேயம் துலைத்து,உயிர் கொள்ளும் யுத்தங்கள் ஒரு புரம்...


இப்படி சில்லரைக்குள் சிக்கிக் கொண்ட மாந்தர்கள் ஒரு முனையில்!

அன்புக்குள் சிறைப்பட்டு கிடக்கும் மாந்தர்கள் மறுமுனையில்!


செல்வத்தின் செழிப்பில் சிலர்...

வருமையின் விழிம்பில் சிலர்!

கண்துடைக்க சில உறவுகள்...

காயப்படுத்த சில உறவுகள்!


கண்ணீரும்,சிரிப்பும்...

ஏற்றமும், தாழ்வும்...

வெற்றியும், தோல்வியும்...

வெள்ளமும், வறட்சியும்....

இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை....

ஒன்றாக கண்டு வியந்து விட்டேன்!

சிரிப்பதா? அழுவதா? திணறிவிட்டேன்... இந்த மாந்தர்களை கண்டு!

இறுதியாக, இந்த ஒரு நாள் பரிசை....

இரவின் போர்வைக்குள் மடித்து...

ஒளி வீசும் முழு நிலவை முத்தமிட்டு....

மீண்டும் இறைவன் கையில் தந்து விட்டேன்!