Saturday, October 30, 2010

ஒளி ஏற்றுங்கள்!!!!




இருள் என் உலகம்!

இமை மூடி படுத்தாலும்...

விழி திறந்து கொண்டாலும்...

இரவுக்கே நான் சொந்தம்!

அணைந்து போன தீபமாய்....

என் கண்கள் ஒளி தேடி தவிக்கின்றன!

உலகம் கண்டதில்லை....

உயிர் கொடுத்த அன்னை கண்டதில்லை....

என் உருவம் கண்டதில்லை...

எந்த உறவும் இதுவரை நான் கண்டதில்லை!

என்னை படைக்கும் போது...

இறைவன் என் கண்ணை படைக்க மறந்துவிட்டான்!

பார்வை இன்றி தவிக்கிறேன்!

ஒரு முறை ஏனும்...

இந்த உலகை காணத் துடிக்கிறேன்!

காத்துருக்கிறேன், என் கண்மணிகள்....

இரவை கடந்து....

என்றாவது விடியல் காணும் என்று!













"கண் தானம் செய்யுங்கள்....

பல கண்களின் கண்ணீர் துடைக்க உதவுங்கள்!!!"

Sunday, October 24, 2010

உதவி செய்வொம்!




விரிந்து கிடக்கும் உலகில்....

சரிந்து கிடக்கிறது நம் மனம்....

சுற்றத்தை நினைக்காமல்...

சுயநலங்கொண்டு!

எங்கோ குப்பையில் அழும் குழந்தை...

கண்டுகொள்ளாமலே நாம் செல்வது என்ன விந்தை!

உறவில்லாமல் தவிக்கிறான் தடி இல்ல கிழவன்...

உணர்வே இல்லாமல், முகம் திருப்பி கொள்கிறோம்....

சில்லரைகள் பத்திரமாய் சட்டை பையில்...

நாம் தான் நம்மை இழந்து....

சிதறிக் கிடக்கிறோம்!

காசில்லா சிறுவன் பசி கொண்டு துடிக்கிறான்...

கல்லாகி போனோமே நாம் கருணயே இல்லாமல்!

இடம் மாறி நாம் இருந்தால் வலி கண்டு இருப்போம்!

சுகமாய் வாழ்வதால்...

சுமை அறியாமலே விட்டு விட்டோம்!

மாற்றுவோம் நம்மை...

இதழகள் விரித்து...

உள்ளங்கள் உணர்ந்து...

கைகள் கோர்து...

இதயம் பார்த்து...

உதவி செய்வோம்!

இறுக்கங்கள் துலைத்து மனம் இலக செய்வோம்!

வறுமை விளங்குகள் ஒழித்து...

அன்பை விடுவிப்போம்!

Friday, October 22, 2010

அன்பு!!!!

அன்பை புரிந்துகொள்ள...
வார்தைகளும்,வாதங்களும் தேவை இல்லை...
மெல்லிய சிரிப்பும், கண்ணிய பார்வையும், ஒரு துளி கண்ணீரும் போதும்!

Wednesday, October 20, 2010

வாழ்கை!

வாழ்கை....
நம் சிரிப்பிலும், கண்ணிரிலும் வண்ணம் எடுத்து...
இறைவன் தீட்டிய அழகிய ஒவியம்!!!

Saturday, October 16, 2010

ஒளி வீசும் இரவு!



அவள் கை கோர்த்து நான் செல்ல...
தெருவெல்லாம் மின்சார மத்தாப்பு....
இரவுக்கு அழகாய்...
நிலவுக்கு துணையாய்...
அவள் கருவிழிகளை கவரட்டும்...
அவள் முகம் காண எனக்கு உதவட்டும்...
விடியும்வரை எரியட்டும் இந்த வீதியெங்கும் மின்விலக்கு!

Thursday, October 14, 2010

நிலா முகம் !!!!!


இரவின் உறக்கத்தை துலைத்து...

நிலவின் வெளுச்சத்தில் உன் முகம் காண்கிறேன்!

கண் இமைக்கும் நொடி கூட கனக்கிறதடி...

உன்னை பார்க்க தடுப்பதால்!

கலைந்து போகும் மேகம்...

உன்னை உரசிச் செல்லும் நேரம்...

பதரிப்போகிறேன் நானும்...

நீ கலைந்துபோகக்கூடும் என்று!

நிலவில் மாறாமல் மிளிர்கிறாய் நீ...

சலிக்காமல் உன்னை காணத் துடிக்கிறேன் நான்!

விழி மூடிக்கொள்கயில்....

என் நித்திரைக்குள் சித்திரமாய் நீ!

கண் விழித்துப் பார்க்கயில்....

வென்னிலவுக்குள் பத்திரமாய் நீ!!!

என் தனிமைக்குள் நீ!!!!


நகரமே விழித்துகிடக்கும் நள்ளிரவில்...

விழியோரம் கண்ணீர் துளி உன் விரல் தேடி தவிக்குதடி!

நிலவு என்னை காண்கயிலே...

தனிமையில் நதியோரம் கால் நனைத்தேன்...

உன் நினைவோடு என்னை சுமந்தேன்!

மெல்ல மெல்ல இரவு தேய்ந்துகொண்டு இருக்க....

நிலவு மிளிர்ந்து கொண்டுஇருக்க...

தனிமை என்னை திண்றுகொண்டுஇருக்க....

உன் நினைவு மட்டுமே என்னை வென்றுகொண்டு இருக்கிறதடி!!!!!!

Wednesday, October 13, 2010

விடியல்!!!

காலை சூரியன் கண் விழிக்கிறானோ....
நெடு மரங்களின் நிழல் காண்கிறானோ....
புல்வெளியின் ஈரம் துடைக்கிறானோ...
நகரத்தின் துயில் கலைக்கிறானோ...
விலகட்டும் திரைகள், விரியட்டும் அவன் கதிர்கள்...
உயிர்களின் உறக்கம் கலையட்டும்...
விடியலில் புது வாழ்கை தொடங்கட்டும்!!!!!!

கற்பனைக் காதல்!!!


என் கனவுக்குள் நீ சிலசமயம்.....
என் கற்பனைக்குள் நீ சிலசமயம்....
விலகி நான் நிற்கிறேன் சிலசமயம்.....
விரும்பி உன்னிடம் வருகிறேன் சிலசமயம்....
மோதிக்கொள்கிறேன் சிலசமயம்.....
உன்னை முத்தமிடுகிறேன் சிலசமயம்......
இப்படி,
என் சிலசமயங்கள் அனைத்தும் இரவோடு ஒழிந்துகொள்ள.....
விடிந்ததும்,
பகலோடு பலசமயம் நினைத்துக் கொள்வேன்....
கனவுக்குள் துலைத்த உன்னை, என்று என் நிஜத்தில் காண்பேன் என்று?????

Tuesday, October 12, 2010

நிஜமாக காத்திருக்கும் கனவுகள்!



கலைந்து போன கனவுகள் கை சேரும்வரை.......
காத்திருந்த நொடிகள் கறைந்து போகும்வரை.....
நழுவ பார்க்கும் நம்பிக்கையை...
இழுத்து பிடித்து மனதோடு கட்டிக்கொள்வோம்.....
நம்மை நாம் இழந்துவிடாமல் இருக்க!!!!

Wednesday, October 6, 2010

துலைந்து போன உறவுகள்!!!


மனிதா!
நீ பங்குச்சந்தையில் உன் பாசத்தை அல்லவா துலைத்து உயர்ந்து கொண்டு இருகிறாய்!
உன் பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்....
அதில், 
பண மூட்டைகள் கிடக்கலாம்...
ஆனால்,
உன் உறவுகள் மடிந்து அல்லவா கிடக்கின்றன!
உண்மையில்,
நீ உன் உறவுகளை சில்லரைக்காக விற்றுக்கொண்டு இருக்கிறாய்....
இந்த உலகம் எனும் வியாபார சந்தையில்!
இனியாவது கொஞ்சம் சிந்தித்து...
விற்றுவிட்ட உன் பாசத்தை விலைகொடுத்தாவது வாங்கிக்கொள்....
துலைந்து போன உன் வாழ்க்கையை மீட்பதர்காக!!!!!!!!

Tuesday, October 5, 2010

வானம்!!!


நிறங்கள் மாறிக்கொள்ளும்.....

நித்திரையில் வன்னத்திரை மூடிக்கொள்ளும்.......

ஒவ்வொரு நொடியும் வன்ன ஒவியங்கள் மாற்றிக்கொள்ளும்......

மாயத்திரை கொண்ட வானமே!

உன்னைக் கண்டு தினம் தினம் வியந்து போகிறேன்!!!!