ஒலித்த அவள் குரலில்....
தன் நிலை தவறிய நீதி தலை குனிந்து நின்றது !
சினம் கொண்ட அவள் விழியில்....
கண்ணீர் நெருப்பை கலந்தது !
சபித்தாள்...
மார்பை அறுத்து எறிந்தாள்....
பத்தினி அவள் சொல்லுக்கு படைத்தவனும் கட்டுப்பட்டான் !
பற்றி எரிந்தது நகரம் !
படிந்த கரை எரிந்து போனது !
சிலம்பு ஒன்றில் அவள் கதை முடிந்து போனது!
காலம் சொல்லும் பெண் அவள்...
வாழ்ந்து சென்ற உண்மை அவள்...
கண்ணகி என்று பெயர் கொண்டவள் !
Wednesday, November 21, 2018
கண்ணகி !!!
Wednesday, October 10, 2018
என் கவிதை!
என்னுள் போட்டிபோடும் வார்த்தைகளை....
பொக்கிஷமாய் பூட்டிவைக்க மனம் இல்லாமல்....
மை கொண்டு நிரப்பினேன் வெள்ளைத்தாளில்....
முற்றுப்புள்ளியை நெற்றிப்புள்ளியாக்கி அழகான கவிதையாய் வந்து நின்றது என் கண்முன்னே!
Friday, February 2, 2018
இரவுகளும் புதிதுதான்!
சில இரவுகள் தனிமை விரும்பும்!
சில இரவுகள் தோழமை விரும்பும்!
சில இரவுகள் தேடல் விரும்பும்!
சில இரவுகள் காதல் விரும்பும்!
சில இரவுகள் காமம் விரும்பும்!
சில இரவுகள் மாற்றம் விரும்பும்! விருப்பம் எதுவாயினும் விடியலில் தன்னை துலைத்து மீண்டும் மீட்டுக்கொள்ளும் புதியதாய்!
Subscribe to:
Posts (Atom)